விவசாயிகள் மே 26-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டம்…! ஆம் ஆத்மி ஆதரவு…!

விவசாயிகள் மே 26-ம் தேதி நடக்கவுள்ள நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கொண்டுவருவதற்காக, மத்திய அரசு இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால், இந்த பேச்சு வார்த்தையில், எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 26-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் அளவில் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு அனைத்து கட்சி ஆதரவையும் கோரியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  இதனை தொடர்ந்து, விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சியும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.