பிரதமர் பதவியேற்ற ஏழு ஆண்டுகள் நிறைவை கருப்பு தினமாக அனுசரிக்கும் விவசாயிகள் அமைப்பு – ஆதரவு தரும் வைகோ!

பிரதமர் மோடி அவர்கள் பதவியேற்ற ஏழாவது ஆண்டு நிறைவு தினமான இன்றைய தினத்தை கறுப்பு தினமாக அனுசரிக்க விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ள நிலையில், இதற்கு ஆதரவு தெரிவிப்பதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014 ஆம் ஆண்டு மே 26ம் தேதி பாஜக அரசு பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இன்றுடன் பிரதமர் மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இந்த நாளை கறுப்பு தினமாக அனுசரிக்க விவசாயிகள் அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவிப்பதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014 மே 26ஆம் தேதி பாஜக அரசு பொறுப்பேற்று நரேந்திர மோடி இந்தியாவின் 14-வது பிரதமராக பதவி ஏற்ற தினம் இன்று. மே 26ம் தேதியுடன் 7 ஆண்டு நிறைவு பெறுவதற்குள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குறியாகி விட்டது எனவும் நாடாளுமன்ற ஜனநாயகம் ஆழ குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனநாயகத்தின் தூண்களான நீதித்துறையும், பத்திரிக்கை, ஊடகத்துறையும் நிர்பந்திக்கப்படுவதாகவும், நிர்வாகத்துறையில் முழுவதும் காவி பாசி படர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து ஒரே கல்வியி எனும் ஒற்றைத் தன்மையை திணித்து இந்து- இந்தி- இந்துராஷ்டிரா எனும் இந்துத்துவ சனாதன சக்திகளின் நீண்டகால திட்டங்களை செயல்படுத்திட ஆட்சி அதிகாரத்தை மோடி அரசு பயன்படுத்தி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும்,  ஜிஎஸ்டி பணமதிப்பிழப்பு போன்றவற்றால் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து இன்னும் உற்பத்தி தொழில் துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீள முடியாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் விவசாயிகளின் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்த கூடிய சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பின் மூலம் அகில இந்திய விவசாயிகளின் கூட்டமைப்பின் தலைவர்கள் நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவடையும் நாளான மே 26-ஆம் தேதி கருப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும் என பிரகடனம் செய்துள்ளதாகவும் இந்த கருப்பு நாள் போராட்டத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளதுடன் இப்போராட்டத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று நாடு முழுவதும் விவசாய அமைப்பு கருப்பு தினமாக அனுசரித்து வருகிறது.

Rebekal

Recent Posts

‘ஐ ஆம் நாட் கிழவன் ..சீனியர் யூத்’ ..! 103 வயது சிஎஸ்கே ரசிகரின் வைரலாகும் வீடியோ !!

CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…

11 mins ago

வெறும் ரூ.9,999 விலையில்…அம்சமான அம்சங்களுடன் ரியல்மி C65 அறிமுகம்.!

Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி  C65…

54 mins ago

யெஸ் பேங்க் பயனரா நீங்கள் ? அக்கௌன்ட்ல இனி இந்த பேலன்ஸ் இருந்தே ஆகணும் ..இல்லைனா ..?

Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள்  தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…

2 hours ago

ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

4 hours ago

தலையில் பேன்டேஜ் உடன் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!

Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…

4 hours ago

தோனியின் ஸ்வாரஸ்யமான விஷயத்தை உடைத்த ருதுராஜ் ..!! யூடூபர் மதன் கௌரியிடம் கூறியது இதுதான் !!

Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…

4 hours ago