விவசாயிகள் விஜய் மல்லையா , நிரவ் மோடி போல கார்ப்பரேட் ரவுடிகள் அல்ல -பஞ்சாப் முதலமைச்சர் ட்வீட் 

விவசாயிகள் விஜய் மல்லையா , நிரவ் மோடி போல கார்ப்பரேட் ரவுடிகள் அல்ல -பஞ்சாப் முதலமைச்சர் ட்வீட் 

விவசாயிகள் விஜய் மல்லையா , நிரவ் மோடி போல கார்ப்பரேட் ரவுடிகள் அல்ல என்று பஞ்சாப் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெற்றது. அனுமதித்த நேரத்திற்கு முன்பே தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீசினர். இதனால் விவசாயிகளுக்கு, போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து வன்முறையாக மாறியது. பின்னர், விவசாயிகள் செங்கோட்டையை முற்றிகையிட்டனர்.

அங்குள்ள கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகளின் கொடி ஏற்றினர்.  இதனைத்தொடர்ந்து வன்முறையை கட்டுப்படுத்த டெல்லியில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பை பலப்படுத்தியது. இந்த வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறை பலர் மீது FIR பதிவு செய்தது.மேலும்  டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக FIRல் இடம் பெற்றவர்களுக்கு டெல்லி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. எஃப் ஐ ஆர்-இல் பெயர் உள்ளவர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை தடுக்க  டெல்லி காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், லுக் அவுட் நோட்டீஸ் அறிவிப்புகள் திரும்பப் பெறப்பட வேண்டும், அவர்கள் விஜய் மல்லையா அல்லது நிரவ் மோடி போன்ற கார்ப்பரேட் ரவுடிகள் அல்ல.அவர்கள் விவசாயிகள். அவர்கள் எங்கே தப்பி ஓடுவார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Join our channel google news Youtube