கொப்பரைத் தேங்காய் விலையை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை…!!

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, சுற்றுவட்டாரப்பகுதிகளில் தேங்காய் உற்பத்தியையே விவசாயிகள் அதிக அளவில் செய்து வருகின்றனர். ஆனால் ஏராளமான விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை உற்பத்தி செய்ய உற்பத்தி  செலவு தற்போது அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்து , கொப்பரைத் தேங்காய் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கொப்பரை தேங்காயின்    விலையை ரூபாய்  110 என்று  நிர்ணயம் செய்தால் எங்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்று அவர்கள் வேண்டுகோள்விடுத்தனர்.