தளபதியின் பீஸ்ட் பட ரிலீஸ் மாஸ் அப்டேட்.! கொண்டாட தயாராகும் ரசிகர்கள்.!

பீஸ்ட் படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பீஸ்ட் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு வரும் 23 ஆம் தேதி நிறைவடைகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் படக்குழு சண்டைக்காட்சிகளுக்காக ரஷ்யா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், கொரோனா குறைந்து வரும் நிலையில், மூடப்பட்ட திரையரங்குகள் அனைத்தும் 50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது கிடைத்த தகவலின் படி, பீஸ்ட் படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.