சூறையாட்டம்..! மகான் படத்தின் முதல் பாடல் வெளியீடு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

மகான் படத்தின் முதல் பாடலான “சூறையாட்டம்” என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா, சனத் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் விக்ரம் கதாபத்திரத்திற்கான போஸ்டர் ரீல் மற்றும் துருவ் விக்ரமுடைய போஸ்டர் ரீல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.

இந்நிலையில், மகான் படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் முதல் பாடலான “சூறையாட்டம்” என்ற பாடல் தற்போது வெளியகியுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இந்த பாடலை வி.எம்.மகாலிங்கம் பாடியுள்ளார். முத்தமிழ் என்பவர் இந்த பாடலை எழுதியுள்ளார்.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய டெவோன் கான்வே… சென்னை அணிக்கு புதிய வீரர் இவர்தான்!

ஐபிஎல்2024: காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து டெவோன் கான்வே விலகினார் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக…

39 mins ago

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு.! அரசியல் கட்சியினர் அதிர்ச்சி..!

Election2024: கேரளாவில் மாதிரி வாக்குபதிவின்போது மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஒட்டுகள் விழுந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும்…

43 mins ago

அசத்தலான சுவையில் அடை தோசை செய்வது எப்படி?

Adai Dosa Recipe-அரிசி ஊற வைக்காமலே ரவையை வைத்து அடை தோசை  செய்வது எப்படி என பதிவில் பார்க்கலாம். தேவையான பொருள்கள்: ரவை =1 கப் பச்சரிசி…

44 mins ago

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வாங்கிக்கொடுத்து சர்ப்ரைஸ் செய்த ராகவா லாரன்ஸ்!

Raghava Lawrence: தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் கலக்கி வரும் மாற்றுத்திறனாளி குழுவினருக்கு இருசக்கர வாகனம் பரிசளித்தார் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். மாற்றுத்திறனாளிகளுக்கு, நடிகர் ராகவா லாரன்ஸ்…

54 mins ago

விஜய் பாட்டுக்கு வந்த நெகட்டிவ் விமர்சனம்! இன்ஸ்டாவை டெலிட் செய்த யுவன்?

யுவன் சங்கர் ராஜா : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டா பக்கம் முடங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தற்போது இயக்குனர்…

1 hour ago

அடேங்கப்பா…தொடர் தோல்வி கொடுத்தாலும் கோடிகளில் சாதனை படைத்த பிரபாஸ்.!

Kalki2898AD: நடிகர் பிரபாஸ் நடிக்கும் "கல்கி 2898-AD" திரைப்படம் ப்ரீ பிசினஸில் ரூ.750 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் "கல்கி…

1 hour ago