Connect with us

கேஜிஎப் 3 அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

சினிமா

கேஜிஎப் 3 அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 1″ இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த 14 ஆம் தேதி :கேஜிஎப் 2” படமும் திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தையும் இயக்குனர் பிரசாத் நீல் இயக்க , நடிகர் யாஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் முதல் பாகத்தை விட இன்னும் சூப்பராக இருக்கிறது என தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். படம் வெளியான நாட்களில் 540 கோடிக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்ததுவருகிறது.

கே ஜி எஃப் 2 படத்தின் இறுதிக்காட்சியில் கேஜிஎஃப் 3 பாகம் உருவாவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு படத்தோட சேர்த்து மற்றோரு ட்ரீட்டாக படக்குழு அறிவித்திருந்தார்கள்.

அந்த அறிவிப்பை தொடர்ந்து கேஜிஎப் 3 படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் கவுடா தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் டிவிட்டரில் KGF 3 என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

ஆனால் இயக்குனர் பிரசாத் நீல் தற்போது பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கி வருகிறார். இதை தவிர்த்து ஜீனியர் என்டிஆர் வைத்து ஒரு படத்தையும் இயக்கவுள்ளார். இரண்டு படங்களை முடித்துவிட்டு கேஜிஎப் 3 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கபடுகிறது.

Continue Reading

More in சினிமா

To Top