தளபதி 66 படத்தை இயக்கும் பிரபல தெலுங்கு இயக்குனர்..??

தளபதி விஜயின் 66 வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சி படிபல்லி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ள நிலையில், படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. அதற்காக பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கும் வேலையில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த ஷாப்பிங் மால் செட்டை அயல்நாட்டு ஷாப்பிங் மால்களுக்கு இணையாக அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தனது 66 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் விஜயின் 66 வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சி படிபல்லி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.