31.1 C
Chennai
Monday, May 29, 2023

மக்களவை தேர்தல் முடிந்த பிறகே மக்கள்தொகை கணக்கெடுப்பு – மத்திய அரசு முடிவு

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பிறகே, இந்தியாவில்...

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையல்ல..! இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ட்வீட்..!

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையானது அல்ல என்று...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை வருமா? வானிலை நிலவரம் என்ன?

ஐபிஎல் பைனலில் ரிசர்வ் டேயில் மழை வருவதற்கான வாய்ப்பு...

சிம்புவுக்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே..? வெளியான ரகசிய தகவல்.!!

பத்து தல திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் தனது 48-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல நடிகரான கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

SilambarasanTR
SilambarasanTR [Image source : twitter/ @ABD_ARUN_17 ]

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘STR48’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்திற்காக சிம்பு நீளமான முடியுடன் இருக்கிறார். விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதற்கிடையில், படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை குறித்த தகவல் கசிந்துள்ளது.

STR48 update
STR48 update [Image source : twitter/ @thanatos__x4 ]

அதன்படி, இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.  100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இந்த திரைப்படம் ஒரு இந்தியத் திட்டமாக இருப்பதால், தீபிகா படுகோனை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

DeepikaPadukone
DeepikaPadukone [Image source : twitter/ @UniqueTalk7 ]

இந்தப் படம் சிம்புவின் நடிப்பில் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையாக இருந்தால், தமிழில் தீபிகா படுகோனே நடிக்கும் இரண்டாவது படமாக ‘STR 48’ அமையும். இவர் ரஜினிகாந்துடன் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் மூலம் கொல்லியூட்டில் அறிமுகமானார் என்பது குறிப்பிடதக்கது.