அதிர்ச்சியில் ரசிகர்கள்.. மைதானத்திலே உயிரிழந்த பிரபல கால்பந்து வீரர் ரபேல் ..!

By

கடந்த நவம்பர் 11 ஆம் தேதி இரவு அல்பேனிய சூப்பர் லீக்கில் நடந்த எக்னேஷியா-பார்டிசானி போட்டியின் போது கானா நாட்டை சார்ந்த ரபேல் த்வமேனா (28)  சுருண்டு மைதானத்திலே விழுந்து இறந்தார். ரபேல் த்வமேனா சரிந்து கீழே விழுந்த உடனே  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

   
   

எக்னேஷியா-பார்டிசானி போட்டி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு நடைபெற்று வந்தது. போட்டி தொடங்கிய 24-வது நிமிடத்தில் மைதானத்திலே ரபேல் த்வமேனா சரிந்து விழும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. அவர் கிழே விழுவதை பார்த்த  நடுவரும் மற்ற வீரர்களும் உடனடியாக ரபேல் த்வமேனா நோக்கி ஒடி சென்றனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வந்து ரபேல் த்வமேனா-வை  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.  ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அல்பேனிய சூப்பர் லீக்கில் தற்போது அதிக கோல் அடித்தவர் என்ற பெருமை த்வமேனா உள்ளது. த்வமேனா கானா நாட்டுக்காக எட்டு சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஆட்டங்களில் இரண்டு கோல்களையும் அடித்துள்ளார். கடந்த 2017-ல் முதன்முறையாக இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து கடந்த அக்டோபர் 2021 இல் ஆஸ்திரிய கோப்பை போட்டியின் போதும் இப்படி மைதானத்தில் கீழே விழுந்தார். பின்னர் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விளையாட தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023