வாள் வைத்து கேக் வெட்டிய பிரபல நடிகர்! போலீசார் வழக்குப்பதிவு!

  • வாள் வைத்து கேக் வெட்டிய பிரபல நடிகர்.
  • வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை. 

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் துனியா விஜய். இவருக்கு கடந்த 20 தேதி பிறந்தநாள். இதனையடுத்து, 19-ம் தேதி நள்ளிரவில், பெங்களூரு கிரிநகரில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினர், மற்றும் ரசிகர்களுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.

அந்த பிறந்தநாள் விழாவின் போது, அவர் கேக்கை வாள் வைத்து வெட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அனுமதி பெறாமல் பந்தல் அமைத்து இவ்வாறு செய்துள்ளார். இதனையடுத்து, அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் நடிகர் துனியா விஜய் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, நீண்ட வாள் பயன்படுத்தியது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி கோரி நடிகர் துனியா விஜய்க்கு கிரிநகர் போலீசார் நோட்டிஸ் அனுப்பி இருந்தனர். அதன்பேரில், நடிகர் துனியா விஜய், கிரிநகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், நீண்ட வாளை பயன்படுத்தி கேக் வெட்டிய விவகாரத்திலும், அனுமதி பெறாமல் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி நடிகர் துனியா விஜய் மீது கிரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.