இணையதளங்களில் வைரலாகும் பிரபல இயக்குநரின் ஃபேமிலி போட்டோ.! 

கௌதம் மேனனின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும்

By ragi | Published: Aug 02, 2020 10:15 AM

கௌதம் மேனனின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான கௌதம் மேனன் தற்போது விக்ரமின் துருவ நட்சத்திரம், வருணின் ஜோஷுவா இமை போல் காக்க ஆகிய படங்களை இயக்கி வருகிறார். மேலும் ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றையும் உருவாக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது அவரது குடும்பத்தினருடன் இணைந்துள்ள சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தனது இரண்டு சகோதரிகள், அப்பா மற்றும் அம்மாவுடன் இணைந்துள்ள தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களின் அப்பாவின் இன்ஸ்பரேஷனில் எடுக்கப்பட்ட படம் தான் வாரணம் ஆயிரம். கௌதம் மேனனின் தந்தை போலவே படத்தில் வரும் சூர்யாவின் கெட்டப் உள்ளதாக  சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். . தற்போது அந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc