மகன் இறந்த சோகம் தாங்காமல் சிலிண்டரை வெடிக்க செய்து குடும்பமே தற்கொலை!

மகன் இறந்த சோகம் தாங்காமல் குடும்பமே சிலிண்டரை வெடிக்க செய்து தற்கொலை செய்து

By Rebekal | Published: Jun 01, 2020 04:20 PM

மகன் இறந்த சோகம் தாங்காமல் குடும்பமே சிலிண்டரை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சியில் உள்ள திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் விஜயகவுரி. அவர்களின் மகன் விஜயகுமார் நேற்று முன்தினம் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மகனின் இழப்பை தாங்க முடியாமல் ஆசிரியை விஜயாகவுரி அவரது இரு மகள்கள் விஜயலக்ஷ்மி மற்றும் விஜயவாணி ஆகியோருடன் சிலிண்டரை வெடிக்க செய்து உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Step2: Place in ads Display sections

unicc