26 C
Chennai
Wednesday, December 2, 2020

நாத்தனாருக்கு தெரியவந்த கள்ளக்காதல் – கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணி!

நாத்தனாருக்கு தனது கள்ளக்காதல் தெரிய வந்ததால், கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணி கைது.

தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வரக்கூடிய குற்றங்களில் ஒன்றாக கள்ளக்காதலும் கொலையும் உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரிட்சர் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய பல்வந்தர்  என்பவரின் மனைவி தான் ஹர்விந்த. இவர் தனது அண்ணன் வீட்டிற்கு செல்வதாக தனது கணவரிடம் கூறிவிட்டு கடந்த இருதினங்களுக்கு முன்பதாக சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பல்விந்தேர் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது அண்ணன் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்பொழுது அவரது மனைவி உடல் முழுவதும் எரிந்த நிலையில் பிணமாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அவரது அண்ணன் வெளிநாட்டில் வேலை செய்பவர், எனவே அண்ணி ராஜ்விந்தரிடம்  இது குறித்து விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிரேத பரிசோதனையில் ஹர்விந்தரின் வயிற்றில் காயமிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து விசாரித்தபோது, வெளிநாட்டில் கணவர் வேலை செய்து வருவதால் அவரது அண்ணிக்கு வேறு ஒரு இளைஞருடன் பழக்கம் உண்டாகி உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததை ஹர்விந்தர் பார்த்துள்ளார். அதனால் பதற்றமடைந்த கள்ளக்காதல் ஜோடிகள் அவ்விடத்தை விட்டு வெளியேற திட்டமிட்டு இருந்தாலும், அவரை ஹர்விந்தர் தடுத்துள்ளார். எனவே அவர்கள் இருவரும் அப்பெண்ணை தாக்கி கொலை செய்து எரித்துள்ளனர். இதனை அப்பெண்ணின் அண்ணி போலீஸ் விசாரணையில் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். எனவே கள்ளக்காதல் ஜோடிகள் இருவர் மேலும், கொலை வழக்கு பதிவு செய்த போலீசார்  இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Latest news

#Burevi Cyclone: வேகம் எடுக்கும் புரவி! தமிழகம் மற்றும் கேரளாவுக்கு மஞ்சள் அலர்ட்!

புயல் கரையை கடக்கும் போது, 95கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால்,  மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவு புரவி...

 #BREAKING: பாம்பனில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு..!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் "புரெவி" புயலாக நேற்று உருவானது. இந்த புயல் இன்று மாலை திருகோணமலையை கடக்கும் எனவும் பின்னர், கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே காலை...

#AUSvIND: இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு..! தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு..!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி வீரர்கள்: ஷிகர் தவான், சுப்மான் கில்,...

இந்தியில் ரீமேக்காகும் “கோலமாவு கோகிலா”.! நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகை.!

நயன்தாராவின் கோலமாவு கோகிலா படம் இந்தியில் ரீமேக் ஆவதை தொடர்ந்து நயன்தாரா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிப்பில்...

Related news