கற்பழிப்பு குற்றவாளிக்கு போலி சான்றிதழ்.! மருத்துவரை 3 மாதம் சஸ்பெண்ட் செய்த டெல்லி மருத்துவ கவுன்சில்.!

கற்பழிப்பு குற்றவாளிக்கு போலிச்சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் மருத்துவர் கஜேந்தர் குமார் நய்யார்  என்கிற மருத்துவரை டெல்லி மருத்துவர்கள் கவுன்சில் இவரை நவம்பர் மாதம் வரையில் மருத்துவத்துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.

டெல்லியில் உள்ள பங்கா சாலையில் வசிக்கும் முகேஷ் சங்வான் (38) என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு கற்பழிப்பு வழக்கில் டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இவருக்கு ஜாமீன் கிடைப்பதற்காக உத்தம் நகரில் வசிக்கும் கஜேந்தர் குமார் நய்யார் என்கிற மருத்துவர் போலி மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளார்.

கடந்த ஜூன் 20ஆம் தேதி, மருத்துவரின் போலி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக தென்கிழக்கு பகுதி போலீசார் அளித்த தகவலின் படி, டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி ஜூலை 16க்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி குற்றப்பிரிவு போலீசார், போலிச்சான்றிதழ் வழங்கிய கஜேந்தர் குமார் நய்யார் என்கிற மருத்துவர் டெல்லி, த்வர்காவில் உள்ள NC மருத்துவமனையிலும், நொய்டாவில் உள்ள KS நர்சிங் ஹோமில் பணியாற்றி வந்தது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து, டெல்லி மருத்துவர்கள் கவுன்சில் இவரை நவம்பர் மாதம் வரையில் மருத்துவத்துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த தகவலை டெல்லி குற்றப்பிரிவு துணை கமிஷனர் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.