பேஸ்புக்கில் நூதன முறையில் பணம் பறிக்கும் பிரபல Fake ID..!

சமீபகாலமாக சமூக வலைதளமான முகநூலால் அதிகபட்சமான பிரச்சினைகள் அதிகர்த்து வருகிறது இதில் முக்கிய பங்கு வகிக்கிறது போலியான ஐடிக்கள்.
சில நாட்களாக கோவிந்தம்மாள் (Govindammal K) என்ற போலி ஐடி மூலம் பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது இந்த ஐடி.

இந்த ஐடி மூலம் நூதன முறையில் பணம் பறிக்கபடுகிறது,அது எப்படி என்றால் இந்த ஐடியை பயன்படுத்துபவர் ஒரு குறிப்பிட்ட பெண்ணின்  புகைப்படத்தை மட்டும் பயன்படுத்துகிறார் , தன்னுடைய பெயர் கோவிந்தம்மாள் என்றும் தான் ஒரு தனியார் கல்லூரியில் 2 ம் ஆண்டு ece பிரிவில் படிப்பதாகவும் தனுக்கு கல்லூரியில் படிப்பை தொடர 7,600 ரூபாய் தேவைப்படுகிறது என்றும் தான் ஒரு போலியான நபர் இல்லை என்றும் சந்தேகம் இருந்தால்  என்னுடைய ஆதார் அட்டையை பாருங்கள் என்று அதை இணைத்து விடுகிறான்  போலி ஆசாமி , இதில் அந்த குறிப்பிட்ட பெண்ணின் புகைப்படம் பயன்படுத்த பட்டுள்ளது.

இந்த போலியான நபர் யார் என்று தெரிந்து கொள்ள தினச்சுவடு சார்பாக நாங்கள் அந்த நபரை தொடர்பு கொண்டோம் அவர் அதை பாணியில் எங்களிடம் பேசினார் நாங்களும் பணம் தருகிறோம் எப்படி அனுப்புவது என்பதற்கு அவர் வங்கி கணக்கு விவரம் மற்றும் தொலைபேசி எண்ணை தருகிறார் . இங்குதான் சுவாரசியம் இருக்கிறது அவர் அனுப்பிய வங்கி கணக்கை விசாரித்த பொழுது அது உண்மையாக கோவிந்தம்மாள் என்ற பெண்ணின்னுடையது தெரியவருகிறது அவரது வயதோ 52 சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்தவர் ஆவார்.

அந்த நபர் பயன்படுத்தும் தொலைபேசி எண், ஆதார் அட்டையும் இவரோடுது 52 வயது பெண்ணின் தகவல்களையும் 21 வயது பெண்ணின் புகைப்படத்தையும் வைத்து இந்த மோசடி நடைபெறுகிறது . இதனால் ஏமாந்தவர்கள் எத்தனை பேர் என்று தெரிய வில்லை ஆனால் பல ஆயிரம் ரூபாய் இந்த வங்கி கணக்கில்
செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment