போலிசாரிடமே அபராத தொகை கேட்ட போலி பெண் போலீஸ்.!

போலிசாரிடமே அபராத தொகை கேட்ட போலி பெண் போலீஸ்.!

காவலரிடமே முகக்கவசம் அணியாததற்கு அபராதம் கேட்ட போலி பெண் போலீஸ் டெல்ல்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் சிவில் சர்விஸ் தேர்வுக்கு ஆயத்தமாகி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன்கிழமை அன்று டெல்லி மாநகர் போலீஸ் சார்பாக தலைமை கான்ஸ்டபிள்  சுமர் சிங் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, டெல்லி திலக் நகரில் ஒரு பெண் முகமூடி அணியாமல் போலீஸ் உடையில் பொதுமக்களிடம் வழிமறித்து முகக்கவசம் அணியததற்கு அபராதம் வசூலித்து வந்தது தெரிந்தது.

இதனையடுத்து, வேறொரு காவலரான அசோக் என்பவரை யூனிஃபார்ம் இன்றி சாதாரண உடையில் அந்த பெண் அருகே சென்றுள்ளார். அப்போது அந்த போலி பெண் போலீஸ், காவலரிடமும் முகமுடி அணியாததற்கு அபராதம் கேட்டுள்ளார். அதற்கு அந்த காவலர், தாங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், திலக் நகர் காவல் நிலையத்தில் வேலை செய்வதாக கூறியுள்ளார்.

அதன் பின்னர், அந்தப்பெண்ணிடம் அடையாள அட்டையை காண்பிக்கும்படி காவலர் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், தர மறுத்து விட்டதாக தெரிகிறது. அதனை அடுத்து அந்தப்பெண்ணை விசாரித்த காவல்துறை அதிகாரிகள். அந்த பெண் பெயர் தமன்னாஜோஹன் எனவும், டெல்லி புறநகர் பகுதியான நங்கோலை (Nangloi) சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது.

மேலும், அந்த பெண் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது ஊரடங்கு காரணமாக வேலை இன்றி தம்பதியினர் தவித்ததால் இந்த மோசடி வேலையில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், அந்த பெண் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ஆயத்தமாகி உள்ளார். ஆனால், இன்னும் தேர்ச்சி பெறவில்லை எனவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பெண்ணிடமிருந்து போலி அபராத சீட்டுகள், 500 ரூபாய் பணம், காவல்துறை உடை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube