வேலை தொடங்கும் 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்ததால், தொழிற்சாலை ஊழியர் பணி நீக்கம்-ரூ.5.5 லட்சம் இழப்பீடு..!

வேலை தொடங்கும் 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்ததால், தொழிற்சாலை ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு, இவருக்கு ரூ.5.5 லட்ச இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தின் எடின்பர்க் அருகே உள்ள லிவிங்ஸ்டனில் உள்ள யங்ஸ் கடல் உணவு தொழிற்சாலையில் வேலை செய்யும் மல்கோர்சாடா க்ரோலிக், வேலைக்கு வருவதற்கு 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்த காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.  க்ரோலிக் காலை 5 மணிக்கு மூன்று பீர் குடித்துள்ளார். இவருக்கு மதியம் 2 மணிக்கு தொழிற்சாலை வேலையின் ஷிப்ட் தொடங்கும்.

அந்நிறுவனத்தில் ஆல்கஹால் அருந்துவது விதி மீறல் ஆகும்.  இதனால் க்ரோலிக்கை பணி நீக்கம் செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கில் நீதிபதி தெரிவித்துள்ளதாவது, பிற்பகல் 2 மணிக்கு  தொடங்கப்படும் வேலைக்கு அதிகாலையில் வேலை தொடங்கும் 9 மணி நேரத்திற்கு முன் பீர் குடித்ததற்கு தொடர்பு இல்லாததால், க்ரோலிக் நியாயமற்ற முறையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஆகஸ்ட் 2020 இல் நடந்த இந்த சம்பவத்திற்கு முன்பு க்ரோலிக் அந்த நிறுவனத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தற்போது இவருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.5.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.