பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர் பொய்யான தகவல் : தண்டனை இனிமேல் நிறுவனத்திற்கே..!!

பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவற்றில் பகிரப்படும் தவறான தகவல்களுக்கான பொறுப்பு, பயனாளர்களிடம் இருந்து சமூகவலைதள நிறுவனங்களுக்கு மாற்றப்படலாம் என இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

Image result for பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர்பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்களில் வதந்திகள், பொய் தகவல்கள் பரவுவது பெருகிவிட்டதால், அதை தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, பொய் தகவல்கள் மற்றும் வதந்திகளை தடுக்க வேண்டும் என சமூகவலைதள நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் உத்தரவிட்டது.

Image result for பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர்

இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தொலைத்தொடர்புத்துறை செயலாளர் அருணா சவுந்திரராஜன், வாட்ஸ் ஆப், பேஸ்புக் குழுக்களில் பகிரப்படும் வதந்திகளுக்கு, அந்த குழுவின் அட்மினே பொறுப்பு என்ற நிலை தற்போது இருப்பதை சுட்டிக்காட்டினார். ஆனால் இனி தவறான தகவல்கள் பகிரப்பட்டால் அதற்கான  பொறுப்பை பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதள நிறுவனங்களே ஏற்கும் வகையில் விதிகளில் மாற்றம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும்,  அவர் தெரிவித்தார்.

DINASUVADU

author avatar
Dinasuvadu desk

Leave a Comment