பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஃபேஸ்புக் ! அடுத்த ஆண்டு ஜூலை வரை வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம்

கொரோனா வைரஸ் காரணமாக  உலக  நாடுகள் அனைத்தும்  முடங்கி உள்ளது.பொருளாதார ரீதியாக கடும் சரிவை பல நாடுகள் சந்தித்து வருகிறது.கொரோனா அச்சறுத்தல் காரணமாக பல முன்னணி தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தி வருகிறது.அண்மையில் கூகுள்   நிறுவனம் தனது பணியாளர்களை அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி அளித்தது. அதேபோல் ட்விட்டர் நிறுவனம்  அனைத்து ஊழியர்களும் விரும்பினால் காலம் முழுவதும் வீட்டிலிருந்தே வேலைகளைத் தொடர அனுமதி அளித்தது.

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் 48,000 பணியாளர்களை அடுத்த ஆண்டு ஜூலை  வரை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதி அளித்துள்ளது.மேலும் வீட்டில் இருந்து பணிபுரிபவர்களின் அலுவலக தேவைக்காக ஒவ்வொரு பணியாளருக்கும் கூடுதலாக தலா  1000 டாலர் வழங்க முடிவு செய்துள்ளது.