31 C
Chennai
Friday, October 22, 2021

மருதையாறு ஆற்றின் கரையோரமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

மருதையாற்றின் நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அடுத்த 48 மணி நேரத்துக்குள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொட்டரை கிராமத்தின் அருகே மருதையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மருதையாறு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் இன்று 11.10.2021 இரவு 6.00 மணிக்கு 87.50 (ச.க.ம.) அளவை எட்டியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் முழு அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் முழு அளவை எட்டியவுடன் நீர்த்தேக்கத்திற்கு வரும் முழு நீர்வரத்தும் மருதையாற்றில் வெளியேறும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.  எனவே மருதையாறு ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் வெள்ள அபாய் முன்னெச்சரிக்கை அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

Hot Topics

Read More