,
Mansukh Mandaviya

அதிக வெப்பம் – மாநிலங்களுக்கு அதிகாரிகள் குழு அனுப்பப்படும் : அமைச்சர் மன்சூக் மாண்டவியா

By

ஒடிசா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநில அதிகாரிகளுடன் நாளை அமைச்சர் மன்சூக் மாண்டவியா ஆலோசனை 

வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்ற பின் அமைச்சர் மன்சுக்கு மாணவியாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், அதிக வெப்பம்,  வெப்ப அலை ஏற்படும் மாநிலங்களுக்கு அதிகாரிகள் குழு அனுப்பப்படும் என்று மத்திய அமைச்சர் மன்சுக்கு மண்டபியா தெரிவித்துள்ளார். பேரிடர் மேலாண்மை, ஐஎம்டி, மத்திய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஒடிசா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநில அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் காணொளியில் ஆலோசிக்க உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஹீட் ஸ்ட்ரோக்கால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க தயாராக இருக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.