சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர கூடுதல் விமானம் சேவை.!

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ஜூன் மாதத்தில் இருந்து

By gowtham | Published: May 29, 2020 03:43 PM

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ஜூன் மாதத்தில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்டும்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு கடந்த 50 நாட்களுக்கு மேலாக போடப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதமாக இந்தியாவில் விமான சேவைகள் முடக்கத்தில் இருந்து வந்த நிலையில், தற்பொழுது, இந்த ஊரடங்கில் தளர்வுகளை மத்திய அரசு அளித்துள்ளதால் உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நியூசிலாந்து, அமெரிக்கா தென் அமெரிக்க ஜெர்மனி உள்ளிட்ட நதிகளுக்கு கூடுதல் விமானம் இயக்கப்படும் என ஏர் இந்தியா விமான சேவை அறிவித்துள்ளது.வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ஜூன் மாதத்தில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்டும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இதற்குமுன் வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc