அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம்? – ஆய்வு நடத்த உயர்நீதிமன்ற உத்தரவு!

அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் ரூ.100 கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணையின்போது, அரசு பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கழகம் கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இதன்பின், அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, பள்ளிக்கல்வி ஆணையருக்கு அறிக்கை தர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களில் ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு செய்து அறிக்கையை பள்ளிக்கல்வி ஆணையருக்கு சமர்பிக்க வேண்டும் என கூறி இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, கொரோனா தொற்று பரவலால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில், நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்