முதல் தவணை கல்வி கட்டணம் செலுத்த தனியார் பள்ளிகளில் அவகாசம் நீட்டிப்பு!

தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான அவகாசம் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தாலும், துவங்க இருக்கின்ற பருவத்துக்கான கல்வி கட்டணம் தற்பொழுது வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் அவர்களது முதல் தவணை கட்ட ணத்தை செலுத்துவதற்கும் தற்போது தனியார் பள்ளிகளில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலும் முதல் தவணை கல்வி கட்டணத்தை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. அதுபோல அரசு உத்தரவை மீறி கூடுதலாக கட்டணம் வசூலிக்க கூடிய பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, இதுவரை 75 புகார்கள் வந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

author avatar
Rebekal