31.7 C
Chennai
Friday, June 2, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிப்பு…இது தான் கடைசி நாள்.!!

தமிழகத்தில் பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 23ம் தேதி வரை நீட்டிப்பு.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது. இந்த தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். இந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வியடைந்த மாணவர்களுக்கு வரும் ஜூன் 19-ஆம் தேதி துணைத்தேர்வு நடைபெறவுள்ளது.

மேலும், தேர்வில் தேர்ச்சி பெறாத 47,934 பேர் விண்ணப்பித்து துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, பிளஸ் 2 மாணவர்களுக்கான துணைத்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 20 வரை உள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளை மே 23ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், துணைத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு ஜூலை மாதமே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.