பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்தியா உட்பட 7 நாட்டு பயணிகள் செல்வதற்கு தடை நீட்டிப்பு!

  • கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே இந்திய பயணிகள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், இந்த தடை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெருந்தொற்று காரணமாக மிக அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து பயணிகள் பிற நாடுகளுக்கு செல்வதால் தங்கள் நாடுகளுக்குள் கொரோனா பரவல்  அதிகரித்து விடும் என்ற அச்சத்தால் பல நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை தடை செய்திருந்தனர். இந்நிலையில், ஃபிலிப்பைன்ஸ் நாட்டிலும் கொரோனா பரவல் காரணமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த துடைக்கலாம் தற்பொழுது முடிவடையவுள்ள நிலையில், இந்த தடையை மேலும் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த 7 நாடுகளுக்கு கடந்த 15 நாட்களாக பயணம் மேற்கொண்ட மற்ற நாட்டு பயணிகளும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

author avatar
Rebekal