இந்திய விமானங்களுக்கான தடை நீட்டிப்பு..! கனடா அரசு அதிரடி…!

கனடாவில், ஜூலை 21-ம் தேதி வரை இந்திய விமானங்களுக்கான தடை அமலில் இருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 21 வரை தடை நீட்டிப்பு.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த  ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்த கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து வரும் நிலையில், தற்போது ஒவ்வொரு நாட்டிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒவ்வொரு நாடுகளிலும் விமான போக்குவரத்துக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கனடாவில், உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, ஜூலை 21-ம் தேதி வரை இந்திய விமானங்களுக்கான தடை அமலில் இருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 21 வரை தடையை நீட்டித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.