2000 துப்பரவு தொழிலார்களின் பணி காலம் நீட்டிப்பு .!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு

By murugan | Published: Mar 31, 2020 07:03 PM

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மேலும் மாநில அரசு அந்தந்த மாநிலத்தில்  கொரோனா தடுப்புக்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 மருத்துவர்கள் ,செவிலியர்கள்  , காவல்துறை மற்றும் துப்பரவு தொழிலார்கள் என பலர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் பஞ்சாப்  மாநிலத்தில் இன்றுடன்  ஓய்வு பெற உள்ள 2000 துப்பரவு தொழிலார்களின் பணியை மேலும் 3 மாதங்களுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நீடித்துள்ளார். பஞ்சாப்  மாநிலத்தில் கொரோனாவால் 38 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் இன்று ஓய்வுபெறும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களை 2 மாதத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc