மேலும் 3 மாதங்களுக்கு மெகபூபா முப்திக்கு நீடிக்கப்பட்ட வீட்டுக்காவல்!

மேலும் 3 மாதங்களுக்கு மெகபூபா முப்திக்கு நீடிக்கப்பட்ட வீட்டுக்காவல்!

ஜம்மு-காஷ்மீரின் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியின் வீட்டு காவலை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க காஷ்மீர் நிர்வாகம் உத்தரவு.

கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு உண்டான அதிகாரம் வழங்கும் 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியது தினமே ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் உமர் அப்துல்லா ஆகிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகிய மூவர் மட்டும் பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள இவர்களை விசாரணையின்றி ஓராண்டு வரையும் காவலில் வைத்திருக்க முடியும். கடந்த வருட ஆகஸ்ட் மாதம் முதல் வீட்டுக் காவலில் இருந்த உமர் அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் இந்த வருடம் மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியை அரசு விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல் வருகிற ஆகஸ்ட் 5-ம் தேதியுடன் அவரது வீட்டு காவலும் முடிவடைய இருப்பதால் மேலும் மூன்று மாதங்களுக்கு வீட்டு காவலில் வைக்க  ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube