முதல்வர் மற்றும் வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பு பணிகளிலிருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு- தமிழக அரசு!

முதல்வர் உள்ளிட்ட விஐபி-க்களின் பாதுகாப்பு பணிகளுக்காக பெண் காவலர்களை  சாலை ஓரம் நீண்ட நேரம் நிற்க வைக்க வேண்டாம் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி அறிவுறுத்தல்.

ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெண் காவலர்கள் மற்றும் வயது முதிர்ந்த காவலர்களின் பணி சுமையை குறைக்கும் விதமாக கர்ப்பமாக இருக்கக்கூடிய பெண் காவலர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் காவலர்களுக்கு அதிக பணிச்சுமை மற்றும் நேரடியாக களத்திற்கு சென்று பணியாற்ற கூடிய பணிகள் ஆகியவற்றை ஒதுக்க வேண்டாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்பொழுதும் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என முதல்வர் முக ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டிஜிபி திரிபாதி அவர்கள் முதலமைச்சர் உள்ளிட்ட விஐபி-க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கவும், சாலைகளில் நீண்ட நேரம் பெண் காவலர்களை நிற்க வைக்க வேண்டாம் எனவும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

author avatar
Rebekal