நெல்லை மாவட்டம், கரையிருப்பு பகுதியை சேர்ந்த அசோக் .இவர்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் மாவட்ட பொருளாளராக பதவி வகித்தவர். இந்நிலையில், இவரது தாயார் சாலையில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த வேறொரு சமூகத்தை சேர்ந்தவர்கள், அவரை மோதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அசோக்கிற்கும், அவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இருப்பினும் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து, அமைதி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில், பணிக்கு சென்றுவிட்டு, பேருந்துக்காக காத்திருந்த அசோக்கை சுற்றி வளைத்த மர்ம கும்பல் அவரை சரமாரிய வெட்டியுள்ளனர்.

இதனையடுத்து, அசோக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்த அசோக்கின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.