மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்…!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்.

இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக  தீர்மானம் கொண்டு வந்து, தமிழக அரசின் தனி தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்தார்.

அந்த தீர்மானத்தில், 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த மூன்று சட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை. மத்திய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டு வந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்ததை கண்டித்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததையடுத்து, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் குரல் வாங்கெடுப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.