4 மாவட்டங்களை தவிர்த்து தளர்வுகளை தரலாம் – மருத்துவ நிபுணர் குழு.!

தமிழகத்தில் சென்னையில் தான் அதிக பாதிப்பு என்றும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது.

தமிழகத்தில் பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், முதல்வருடன் ஆலோசனை கூட்டம் முடிந்தபின், தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவ குழு பிரதிநிதியான ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர், தமிழகத்தில் சென்னையில் தான் அதிக பாதிப்பு என்றும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 4 மாவட்டங்களை தவிர்த்து தளர்வுகளை தரலாம். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தளர்வுகள் தரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்பில் 77% சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. கொரோனா பாதிப்பு நீடித்தால் பொதுமுடக்கத்தை முழுமையாக தளர்த்த முடியாது என்றும் படிப்படியாக தளர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் சென்னையில், பஸ், ரயில் போன்ற சேவைகள் விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்