3000 மான்கள் கூட்டம் துள்ளி குதித்து ஓடிய காட்சி..!ரீடிவீட் செய்த பிரதமர் மோடி!

3000 மான்கள் ஒரே இடத்தில் துள்ளி குதித்து ஓடிய அழகிய காட்சியை பிரதமர் மோடி ரீடிவீட் செய்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள பாவ்நகர் மாவட்டத்தில் உள்ளது வெலவாடர் தேசிய பூங்கா. இந்த பூங்காவில் அதிகளவு இருப்பது மான்கள். அதிலும் அழியும் நிலையில் உள்ள மானினமான பிளாக்பக்(கலைமான்கள்) மான்கள் அதிகளவு உள்ளது.  மேலும், இந்த பூங்காவில் பல்வேறு வகையில் இருக்கும் புல்லின வகைகள் உள்ளது.

இதனையடுத்து இந்த இடத்தில் வலசை நேரங்களில் வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வருவது வழக்கம். முக்கியமாக ஃப்ளெமிங்கோ மற்றும் பெலிக்கன்கள் இந்த பூங்காவிற்கு வருகை தரும். தற்போது இந்த வெலவாடர் ப்ளாக்பக் தேசியப் பூங்காவில் அமைந்துள்ள சாலையில் மான்கள் துள்ளி குதித்து ஓடும் காட்சியை பூங்கா நிர்வாகம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

மேலும், இந்த காட்சியில் கிட்டத்தட்ட 3000 மான்கள் இருக்கும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த பூங்காவின் அரிய காட்சியை பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் ரீடிவீட் செய்துள்ளார். இந்த காட்சியை பதிவிட்டு ‘எக்ஸலண்ட்’ என்று தெரிவித்துள்ளார்.  இதற்கு முன்னர் பிரதமர் மோடி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் மயிலுடன் இருக்கும் காட்சியை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.