31.7 C
Chennai
Friday, June 2, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலிக்கு “Z பிரிவு” பாதுகாப்பாக அதிகரிப்பு!

பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் பாதுகாப்பை Z பிரிவாக உயர்த்த மேற்கு வங்க அரசு முடிவு.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியின் பாதுகாப்பை மேற்கு வங்க அரசு Z பிரிவுக்கு உயர்த்தியுள்ளது. கங்குலிக்கு வழங்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது Z பிரிவு உயர்த்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

கங்குலியின் ஒய் பிரிவு பாதுகாப்பின் காலம் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பாக மேற்கு வங்க அரசு மறு ஆய்வு செய்தது. இதில், கங்குலியின் பாதுகாப்பு வளையத்தை இசட் வகைக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய Z பிரிவு பாதுகாப்பு ஏற்பாட்டின்படி, முன்னாள் பிசிசிஐ தலைவருக்கு 8 முதல் 10 போலீசார் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.