உலகின் விலை உயர்ந்த மாம்பழமான ‘மியாசாகி’ ராய்ப்பூர் மாம்பழத் திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் உள்ள சர்வதேச சந்தையில் மாம்பழத் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் ரூபாய் 1.82 லட்சம் மதிப்புள்ள உலகின் விலை உயர்ந்த மாம்பழமான ‘மியாசாகி’ காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த ‘மியாசாகி’ மாம்பழம் ஒரு கிலோ ரூ. 2.75 லட்சத்துக்கு விற்கப்படுகிறது.
சுமார் 639 கிராம் எடை கொண்ட ‘மியாசாகி’ மாம்பழம் ஜப்பானில் வளர்க்கப்படுகிறது. இந்த ‘மியாசாகி’ வகை மாம்பழம் ஜப்பானின் புகழ்பெற்ற மாம்பழமாகும். சூரிய ஒளி படும் இந்த மாம்பழத்தின் பகுதி ஒருவித சுவையும், மற்ற பகுதி வேறு விதமான சுவையும் கொண்டிருக்கும்.
திருவிழாவில் மாம்பழங்களை காட்சிப்படுத்திய கோல் இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் கூறுகையில், இந்த மாம்பழத்தை வளர்க்க அதிக அக்கறை தேவை. இந்த மாம்பழங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் பரிசளிப்பு நோக்கங்களுக்காக வியாபாரம் செய்யப்படுவதால், இந்த மாம்பழத்தின் விலை சாதாரண மாம்பழங்களை விட அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.