“ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5000 வழங்கவேண்டும்” – மு.க ஸ்டாலின்

“ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5000 வழங்கவேண்டும்” என்று   மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில்  அதிகரித்து வருகிறது.எனவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வந்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனிடையே இன்று மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பினைச் சமாளிக்கவும், அனைவருடைய கையிலும் பணப்புழக்கம் அதிகரிக்கவும், தேவையான நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் வாங்கும் திறனை உயர்த்த வேண்டும்”.

“அத்தியாவசியத் தேவைகளுக்காக அளித்த 1000 ரூபாய் போதாது என்பதால், குறைந்தபட்சம் 5000 ரூபாயாவது ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடியாகப் பணமாக வழங்கப்பட வேண்டும்”.ஊரடங்கு காலத்தில் உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்லவும் – மக்கள் நடமாடவும் அறவே தடை செய்யாமல், சில கட்டுப்பாடுகளுடன் தளர்வு அளிக்க வேண்டும்”.கிராம மக்களின் வருமானத்தை வலுப்படுத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை வருடத்திற்கு 250 நாட்களாக உயர்த்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.