ஒவ்வொரு மருமகளுக்கும் தங்கள் மாமியாரிடம் இருக்கும் முக்கிய மனக்குறைகள்!

ஒவ்வொரு மருமகளுக்கும் தங்கள் மாமியாரிடம் இருக்கும் முக்கிய மனக்குறைகள்!

திருமணமாகி பிறந்தகத்தை விட்டு பிரிந்து, புகுந்த இடம் செல்லும் பெண்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவது மாமியாருடனான உறவு தான். பெண்ணுக்கு பெண்ணே எதிரி போல் விளங்குவது இந்த மாமியார்-மருமகள் உறவில் தான்.

ஒவ்வொரு மருமகளுக்கும் தங்கள் மாமியாரிடம் இருக்கும் முக்கிய மனக்குறைகள் யாவை என்பதை இந்த கட்டுரையில் படித்து அறியலாம்.

மனக்குறை #1

உங்கள் மகனுக்கு மகிழ்ச்சி அளிக்க வந்த, உங்கள் மகனின் சரிபாதியாக விளங்கும் என்னிடம் தங்களுக்கு முழுமையான பாச உணர்வு தோன்றாதது ஏன்? – இந்த குறையை சந்திக்காத மருமகள்களே இல்லை என்று கூறலாம்; மிகச்சில அதிர்ஷ்டசாலி பெண்கள் மட்டுமே மாமியாரின் பாசத்தை முழுமையாக பெற்றிருப்பர்.

மனக்குறை #2

தமது மகன் மீது தாங்கள் கொண்ட அதிகாரம் நான் வந்ததும் குறைந்ததாய் அல்லது அதிகாரத்தை முற்றிலும் இழந்ததாய் நீங்கள் எண்ணுவதேன்? அவர் உங்கள் மகன் – இந்த சூழ்நிலையை சந்திக்காத பெண்களே இல்லை; தனது திருமண வாழ்வின் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனையை ஒவ்வொரு பெண்ணும் சந்தித்து தான் ஆக வேண்டிய நிலை இன்றைய சமூகத்தில் நிலவுகிறது.

மனக்குறை #3

தங்கள் மகளை தாங்குகின்றீர்! என்னை நீங்கள் தங்கத்தட்டில் தாங்க வேண்டாம்; குறைந்தபட்சம் என்னை ஒரு வேலைக்காரி போல் நடத்துவதை தவிர்க்கலாமே! – இது பல பெண்களுக்கு நிகழும் ஒரு முக்கிய பிரச்சனை; மருமகள்களை மகள் போன்று நடத்தாவிட்டாலும், ஒரு வேலைக்காரி போலாவது நடத்தாமல் இருக்கலாம்.

author avatar
Soundarya
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *