மாலை நேர ஸ்நாக்ஸ் : சுவையான வெஜ் கட்லட் செய்வது எப்படி.?

மாலை நேர ஸ்நாக்ஸ் : சுவையான வெஜ் கட்லட் செய்வது எப்படி.?

மாலை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூடான டீ-யுடன் ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிட விரும்புவார்கள்.அவர்களுக்காக இந்த மாலை வேளையில் சுவையான வெஜ் கட்லட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • கேரட் – 1
  • பீன்ஸ் – 3
  • உருளைக்கிழங்கு – 3
  • ரொட்டி (ப்ரெட்) – 6
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகாய்த்தூள் – 1 மேஜைக்கரண்டி
  • மல்லித்தூள் – 1/2 மேஜைக்கரண்டி
  • கரம் மசாலா – 1/4 மேஜைக்கரண்டி
  • கடலை எண்ணெய் – தேவையான அளவு
  • கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை :

முதலில் 3 உருளைக்கிழங்கு,1 கேரட் மற்றும் 3 பீன்ஸ் ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பின்னர் அதனை ஒரு குக்கரில் காய்கறிகள் மூழ்குற அளவில் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.மேலும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைத்து வேக வைக்கவும்.

அதிக சூட்டில் கேஸை வைத்து விட்டு குக்கரில் இருந்து முதல் விசில் வந்ததும்,கேஸை மித சூட்டில் வைக்க வேண்டும்.அடுத்த 10 நிமிடங்களுக்கு பிறகு கேஸை அணைத்து விட்டு வேக வைத்த காய்கறிகளை வடிகட்டி விட்டு நீரை வெளியேற்ற வேண்டும்.அதன் பின் வேக வைத்த காய்கறிகளை ஒரு பவுலில் வைத்து மசித்து வைக்க வேண்டும்.அதன் பின் 6 ரொட்டிகளை சிறுது சிறுதாக நறுக்கி மிக்ஸியில் வைத்து நன்றாக அரைத்து விட்டு அதனை இரு பாத்திரங்களிலாக பிரித்து வைக்க வேண்டும்.

அதில் ஒரு பாத்திரத்தில் கால் பங்கும் , மற்றொரு பாத்திரத்தில் முக்கால் பங்குமாக பிரித்து வைக்க வேண்டும்.அதனையடுத்து மசித்து வைத்துள்ள அந்த காய்கறியில் மிளகாய்த்தூள், மல்லித்தூள்,கரம் மசாலா, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை கலந்து வைக்க வேண்டும்.

அதில் பொடியாக்கி வைத்துள்ள ரொட்டி மாவின் கால் பங்கை கலந்து நன்றாக பிசைந்து கையில் ஒட்டாத அளவிற்கு சற்று சப்பாத்தி மாவை போன்று திடமாக வைத்து கொள்ள வேண்டும்.பிசைந்து வைத்துள்ள இதனை ஒவ்வொரு சிறு உருண்டையாக ஒவ்வொரு பகுதியும் ஒரே மாதிரியாக இருக்கும் விதத்தில் உருட்டி,அதனை முக்கால் பங்காக எடுத்து வைத்துள்ள ரொட்டி மாவில் போட்டு எடுக்க வேண்டும்.

அந்த உருண்டையின் ஒவ்வொரு பகுதியையும் ரொட்டி மாவை போட்டு எடுக்க வேண்டும்.அதன் பின் அடுப்பில் மிதமான சூட்டில் வைத்துள்ள எண்ணெயில் இந்த கட்லட்களை போட்டு பொரிக்க வேண்டும்.கட்லட்டின் ஒரு பகுதி வேக 1 நிமிடமாகும்.கட்லட்டின் இரு புறமும் பொன்னிறநிறமானதும் எண்ணெயிலிருந்து எடுக்க வேண்டும்.இப்போது சுவையான வெஜ் கட்லட் ரெடி .இதனை புதினா சட்னியுடன், தக்காளி சாஸூடனும் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *