,

கழுத்தில் மாலை, அருகில் மதகுரு – சமந்தா வெளியிட்டுள்ள வைரல் புகைப்படம் உள்ளே!

By

கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன், மதகுரு அருகில் அமர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரக்கூடிய புதிய தமிழ் திரைப்படமாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் எனும் திரைப்படத்தில் மற்றொரு நடிகையாக நயன்தாராவுடன் இணைந்து சமந்தாவும் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்திற்காக யோகா கற்றுக் கொள்ளும் பயிற்சியில் சமந்தா ஈடுபட்டுள்ளார். மேலும், இந்த படம் குறித்த சில நிகழ்வுகளையும் அவ்வப்போது தனது சோசியல் மீடியா பக்கங்களில் ரசிகர்களுடன் சமந்தா பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்று சத்குருவை சந்தித்துள்ள நடிகை சமந்தா தனது கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் குரு அருகில் அமர்ந்தவாறு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில் முழு முயற்சி என்பது உங்களுக்குள் வரையறுக்கப்பட்ட ஒரு நிலையை உடைத்து மகத்தான அனுபவத்தை உணர்வதாகும். அறியாமையின் விளைவாக உருவாகிய வரையறுக்கப்பட்ட அடையாளத்தில் இருந்து உங்களை நீக்கிக் கொண்டு ஒரு நல்ல படைப்பாளியாக நீங்களே உங்களை உருவாக்கிக் கொள்வதுதான் ஆன்மீகம். அது ஆனந்தமான எல்லையற்ற பொறுப்பு எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், அறிவு மட்டுமே சாதனை அல்ல எனவும், நீங்கள் ஒருபோதும் வெளிப்புற தோற்றத்தை அனுபவித்து இருக்க மாட்டீர்கள். அனுபவிக்கக்கூடிய அனைத்தும் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணரும் போது நீங்கள் உண்மையிலேயே அறிவொளியை பெற்று விட்டீர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

 

View this post on Instagram

 

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl)

Dinasuvadu Media @2023