பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் வேளாண் சட்டத்தில் குறைகாண முடியாது – முதல்வர்..!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் வேளாண் சட்டத்தில் குறைகாண முடியாது – முதல்வர்..!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் உத்தரவாத மசோதா மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை கூறி, எதிர்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த 3 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா தவிர 2 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்பொழுது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்.

வேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் ஸ்டாலின் விவரம் தெரியாமல் எதிர்க்கிறார். மேலும், பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் வேளாண் சட்டத்தில் குறைகாண முடியாது. எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

author avatar
murugan
Join our channel google news Youtube