பத்து காசு இல்லன்னாலும் பணக்காரண்டா, என் செத்து சுகம் எல்லாமே என் நண்பன் தானேடா.! ஜெயில் படத்தின் முக்கிய அறிவிப்பு.!

பத்து காசு இல்லன்னாலும் பணக்காரண்டா, என் செத்து சுகம் எல்லாமே என் நண்பன் தானேடா.! ஜெயில் படத்தின் முக்கிய அறிவிப்பு.!

  • jail |
  • Edited by ragi |
  • 2020-08-03 12:32:50

ஜி. வி பிரகாஷ் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் செக்கன்ட் சிங்கிள் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.

கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார்.மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் கூட இந்த படத்திலுள்ள "காத்தோடு காத்தானேன் " என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடியுள்ள பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது பிரண்ஷிப் டேய் ஸ்பெஷலாக ஜி. வி. பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெயில் படத்தின் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் "பத்து காசு இல்லன்னாலும் பணக்காரண்டா, என் செத்து சுகம் எல்லாமே என் நண்பன் தானேடா என்ற வரிகளை தந்த தெருக்குறள் அறிவு அவர்களுக்கு நன்றி என்றும், ஜெயில் படத்தின் செக்கன்ட் சிங்கிளான பிரண்ஷிப் பாடலை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

Latest Posts

பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம்!
#BREAKING: பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்.. ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை..!
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை
மாணவ - மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா ஒருபுறமும் , அதிமுக அரசு மறுபுறமும் விளையாடுகிறது - மு.க. ஸ்டாலின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள், எங்கள் மக்களுக்கு செய்த சேவைக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்!
"தேசிக விநாயகம் பிள்ளை" நினைவு நாளில், தமிழ் உணர்வை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்- பன்னீர்செல்வம்..!
70 ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஒரே ஒரு பெருமை பயங்கரவாதம் தான் - இந்தியா பதிலடி
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை- தோனி..!
மனைவி குடும்பத்தினரால் கௌரவ கொலை செய்யப்பட்ட கணவர்!
கர்நாடக சட்டமன்றத்தில் மூன்று மணி நேரத்தில் நில திருத்த மசோதா உள்ளிட்ட  9 மசோதாக்கள் நிறைவேற்றம்