உலகப்போரின் போது கூட இந்தளவு முடக்கம் நிலை இல்லை – ராகுல் காந்தி

இந்தியாவில் ஊரடங்கு உண்மையில் தோல்வியடைத்துள்ளது. இங்கு மட்டும் தான் பாதிப்பு அதிகரிக்கும்போது தளர்வுகளும் அதிகரிக்கின்றன.

இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொருளாதார நிபுணர்களிடம் காணொலி மூலம் பேசி வருகிறார். அந்தவகையில், இந்த வாரம் பஜாஜ் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் ராஜூவ் பஜாஜியுடன் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, ராகுல் காந்தி பேசுகையில், உலகப்போரின் போது கூட இந்தளவு முடக்க நிலை நிலை இல்லை என்றும் அப்போதுகூட சில விஷயங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது என்று தெரிவித்துள்ளார். 

இந்த பொதுமுடக்கம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை கடுமையக பாதித்துவிட்டது என்றும் அவர்களால் எங்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். இந்த நிலையில், ராஜூவ் பஜாஜ், ஒருவேளை நீங்கள் இந்த சமயத்தில் என்ன செய்திருப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ராகுல், மத்திய அரசு ஒரு செயல்பாட்டாளர்களாக செயல்பட்டிருக்க வேண்டும்.

கொரோனாவுக்கு எதிரான போரை மாநில முதல்வர்களுக்கு நகர்த்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு பின்வாங்கி விட்டது என்று தெரிவித்துள்ளார். தற்போது நேரமும் கடந்துவிட்டது. இதனால் இந்தியாவில் ஊரடங்கு உண்மையில் தோல்வியடைத்துள்ளது. இங்கு மட்டும் தான் பாதிப்பு அதிகரிக்கும்போது தளர்வுகளும் அதிகரிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்