ஒரு சிறிய கருணை செயலாக இருந்தாலும் அது நன்மை பயக்கும்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வெளிநாட்டில் வனத்தில் அருகில் வசித்து வரும் ஒருவர், நீர்குட்டை ஒன்றை தோண்டி, அதன் பயனை அறிவதற்காக கேமரா ஒன்றை பொருத்தியுள்ளார்.

இன்று மனிதர்கள், விலங்குகளின் வாழிடங்கள் மற்றும் உணவு ஆதாரங்களை அளிப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் விலங்குகளும் கூட மனிதர்களின் சுயநலத்திற்காக கொல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், வெளிநாட்டில் வனத்தில் அருகில் வசித்து வரும் ஒருவர், நீர்குட்டை ஒன்றை தோண்டி, அதன் பயனை அறிவதற்காக கேமரா ஒன்றை பொருத்தியுள்ளார். அந்த கேமராவில் பதிவாகியுள்ள காட்சியில், கரடி, நரி, வான்கோழி, பருந்து உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் வந்து நீர் அருந்தும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதனை ரசித்த இணையவாசிகள், ஒரு சிறிய கருணை செயலாக இருந்தாலும் அது நன்மை பயக்கும்.’ என பதிவிட்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.