#ELECTIONBREAKING: இ.யூ.மு.லீக், மமகவுடன் திமுக ஒப்பந்தம் கையெழுத்து.! எத்தனை தொகுதிகள் தெரியுமா.?

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியோடு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் இறுதி முடிவு எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சியோடு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதாவது, திமுக கூட்டணியில் இ.யூ.மு.லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், 5 தொகுதிகள் கேட்கப்பட்டது, திமுகவில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதால் 3 ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையழுத்தானது என்று தெரிவித்துள்ளார்.

எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஏணி சின்னத்தில் தான் போட்டியிட உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் எந்தந்த தொகுதிகள் என்பது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் பின்னர் அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்