ஈரோடு இடைத்தேர்தல் – இன்று வாக்கு எண்ணிக்கை..! வெற்றி கனியை பறிக்க போவது யார்…?

ஈரோடு இடைத்தேர்தல் – இன்று வாக்கு எண்ணிக்கை..! வெற்றி கனியை பறிக்க போவது யார்…?

ஈரோடு கிழக்கு இடைதேர்த்லில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு பதிவு கடந்த 27-ஆம் தேதி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில்,  காலை 7 மணி முதல், மாலை 6 மணி வரை 238 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

வாக்குப்பதிவு 

33 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 238 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து, வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 74.74 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

77 வேட்பாளர்கள் போட்டி 

ERODEBYPARTIES

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. அதன்படி, திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை 

erodebyelectionresult28

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 15 சுற்றுகளாக எண்ணப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கைக்கு 16 மேசைகள் போடப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை இரண்டு மேசைகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற போவது என அரசியல் வட்டாரத்திலும், பொதுக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *