100 அடியை தாண்டிய அணை நீர்மட்டம்.! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகமாகிக்கொண்டே வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, திருப்பூர், கரூர்  மாவட்ட விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும், சுற்றுவட்டார மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது ஈரோடு பவானிசாகர் அணை.

நீலகிரி மலைத்தொடர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நீலகிரி மாயாறு மற்றும் பில்லூர் அணையில் இருந்து பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகமாகி கொண்டே வருகிறது நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.3 அடியை தாண்டியது. அணைக்கு 5000 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாகவும், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகமாகிக்கொண்டே வருவதாலும், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1955ஆம் ஆண்டு கட்டப்பட்ட பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டுகிறது. இந்த வருடம் 100 அடியை தாண்டுவது இதுவே முதல்முறையாகும்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

பாஜக ஏன் வரவே கூடாது? – முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

MK Stalin: பாஜகவையும், அதிமுகவையும் புறக்கணிப்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் இன்னும் 3 தினங்களில் நடைபெற…

17 mins ago

2-வது தோல்வியை சந்திக்க போகும் அணி எது ..? கொல்கத்தா – ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதவுள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின்-17வது சீசனின் இன்றைய போட்டியில் கொல்கத்தா…

26 mins ago

கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

ஐபிஎல்2024:பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை பறிகொடுத்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்றைய…

11 hours ago

சிக்ஸர் மழையாக பொழிந்த டிராவிஸ் ஹெட், கிளாசென்..பெங்களூருக்கு 288 ரன்கள் இமாலய இலக்கு ..!

ஐபிஎல்2024: முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தனர். இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,  ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது.…

13 hours ago

ஐபிஎல் 2024 : டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச முடிவு ! மேக்ஸ்வெல் இல்லாமல் களமிறங்கும் பெங்களூரு ..!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இன்றைய நாளின் இரவு 7.30 மணி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ்…

15 hours ago

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ‘விசில் போடு’ பாடல் படைத்த சாதனை!

Whistle Podu : கோட் படத்தில் இருந்து வெளியான விசில் போடு பாடல் வெளியான 24 மணி நேரத்தில் பெரிய சாதனையை படைத்தது இருக்கிறது. வெங்கட் பிரபு…

15 hours ago