100 அடியை தாண்டிய அணை நீர்மட்டம்.! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகமாகிக்கொண்டே வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, திருப்பூர், கரூர்  மாவட்ட விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும், சுற்றுவட்டார மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது ஈரோடு பவானிசாகர் அணை.

நீலகிரி மலைத்தொடர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நீலகிரி மாயாறு மற்றும் பில்லூர் அணையில் இருந்து பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகமாகி கொண்டே வருகிறது நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.3 அடியை தாண்டியது. அணைக்கு 5000 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாகவும், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகமாகிக்கொண்டே வருவதாலும், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1955ஆம் ஆண்டு கட்டப்பட்ட பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டுகிறது. இந்த வருடம் 100 அடியை தாண்டுவது இதுவே முதல்முறையாகும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.