கோவை வேளாண் பல்கலைக்கழத்தில் சமத்துவ பொங்கல் விழா…!!!

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சமத்துவ பொங்கல் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் சமத்துவ பொங்கல் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில், மாணவ மாணவிகள் சாதி, மத, இன வேறுபாட்டை கலைந்து, சமத்துவ பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.

இந்த விழாவில் மாணவ, மாணவிகள் சேலை மற்றும் வேஷ்டி போன்ற பாரம்பரிய உடைகளை அணிந்து மிக சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.